உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு

சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு

மலையாளத் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் குணசித்திர நடிகராக மாறி தேசிய விருதும் பெற்றவர் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தற்போது வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாகவும் மாறி மாறி நடித்து வருகிறார். கடந்த வருடம் விக்ரம் நடிப்பில் வெளியான வீரதீர சூரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் அடியெடுத்து வைத்தார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிவராஜ் குமார் நடிப்பில் உருவாகி வரும் டாட் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் கன்னட திரை உலகிலும் முதன்முறையாக அடியெடுத்து வைத்துள்ளார் சுராஜ் வெஞ்சாரமூடு. இந்த படத்தை அனில் கன்னேகண்டி என்பவர் இயக்குகிறார். தந்தை மகள் பாசத்தை மையப்படுத்தி இது உருவாகி உள்ளது. அந்த வகையில் ஒரே நேரத்தில் தமிழில் ஜெயிலர் 2 மற்றும் கன்னடத்தில் டாட் என இரண்டு படங்களில் சிவராஜ் குமாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் சுராஜ் வெஞ்சாரமூடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !