பீதியில் புரோட்டா காமெடியன்
ADDED : 12 hours ago
சமீப காலமாக, 'ஹீரோ'வாக மட்டுமே நடித்து வரும், புரோட்டா காமெடியன், தன்னை, 'ஹீரோ'வாக நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அமரன் நடிகர் பாணியில் தானும் ஒரு படத்தை தயாரித்து, நடிக்கப் போகிறார்.
ஆனால், அவரது சினிமா நண்பர்களோ, 'நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். படம் தயாரிப்பது போன்ற விஷப்பரீட்சையில் இறங்க வேண்டாம். படம் வெற்றி பெற்றால் பிரச்னை இல்லை. ஒருவேளை தோல்வி அடைந்தால், இதுவரை சம்பாதித்த மொத்த காசும் போய் விடும்...' என்று நடிகருக்கு, 'அட்வைஸ்' செய்து வருகின்றனர்.
இதனால், 'அவசரப்பட்டு தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து விட்டோமோ...' என்று மனதளவில் பீதியில் இருந்து வருகிறார், புரோட்டா காமெடியன்.