உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஷ்மிகாவின் 'மோதிர' ரகசியம்…

ராஷ்மிகாவின் 'மோதிர' ரகசியம்…

தெலுங்குத் திரையுலகத்தின் பரபரப்பான காதல் ஜோடி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா. அவர்கள் இருவரும் தங்களது காதலை வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் அதை இதுவரை மறுத்துப் பேசியதில்லை. என்ன கேட்டாலும் சிரித்துக் கொண்டே கடந்து போய்விடுவார்கள். இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாக பரபரப்பான செய்திகள் வெளியாகின. ஆனால், அவர்கள் இருவரும் அது குறித்து இதுவரை எதுவுமே சொல்லவில்லை.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம், அவரது விரல்களில் உள்ள மோதிரங்களைப் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவை 'மிகவும் முக்கியமானவை' என ராஷ்மிகா பதிலளித்துள்ளார்.

ஓடிடி தளத்திற்காக ஜெகபதிபாபு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதுதான் ரஷ்மிகா இப்படி கூறியுள்ளார். அதன் புரோமோ மட்டும்தான் வெளியாகி உள்ளது. முழு நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. அப்போதுதான் அவரது 'மோதிர' ரகசியத்திற்கான மீதி விஷயங்கள் வெளிவரும் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !