உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி

அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி


தமிழ்சினிமாவில் ஒரு காலத்தில் அதிக கவுரவ வேடங்களில் நடித்தது ஜீவா, ஆர்யா ஆகியோர்தான். நட்புக்காக பந்தா இல்லாமல் சின்ன கேரக்டரில் கூட இவர்கள் நடித்தார்கள். பின்னர், அந்த இடத்தை விஜய்சேதுபதி பிடித்தார். பல படங்களில் அவர் கெஸ்ட்ரோலில் நடித்தார். சில படங்களுக்கு சம்பளம் கூட வாங்கியதில்லை. ஆனால், இதுவே அவர் இமேஜ்க்கு பிரச்னை ஏற்படுத்த, இனி யார் கேட்டாலும் சின்ன ரோலில், கெஸ்ட்ரோலில் நடிக்கமாட்டேன் என்று முடிவெடுத்தார்.

அதேபோல், தமிழில் 'மாஸ்டர், ஜவான்' படங்களில், 'உப்பென்னா' என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்தார். அதனால், தனது ஹீரோ இமேஜ், பிஸினஸ் அடிவாங்குவதாக நினைத்ததால் இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். தமிழ் தெலுங்கு, இந்தி என எந்த மொழியாகட்டும் வில்லனாக நடிக்கமாட்டேன். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் என் பாலிசியை மாற்றமாட்டேன் என்றும் முடிவெடுத்தார்.

இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதிக்கு அழைப்பு வந்து இருக்கிறதாம். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துவிட்டீர்கள். அஜித்துக்கும் வில்லன் ஆகிவிட்டால் நல்லா இருக்கும். உங்க கேரக்டர் வலுவாக இருக்கும். சம்பளமும் அதிகம். யோசித்து முடிவெடுங்கள் என்று விஜய்சேதுபதிக்கு துாது விடப்பட்டு இருக்கிறதாம்.

அதேபோல், லாரன்சின் அடுத்த படத்திலும் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியிடம் கேட்கப்பட்டு இருக்கிறதாம். இப்பதான் நீங்க ஹீரோவாக நடித்த 'தலைவன் தலைவி' 100 கோடி வசூலித்துள்ளது. அடுத்து மிஷ்கினின் 'டிரைன்' வர உள்ளது. அடுத்து நீங்க ஹீரோவாக நடிக்கும் படங்கள் வரிசையில் உள்ளன. இந்த சூழ்நிலையில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நண்பர்கள் எச்சரித்து இருக்கிறார்கள். ஆனாலும், குழப்பத்தில் இருக்கிறாராம் விஜய்சேதுபதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !