கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி
ADDED : 169 days ago
‛வணக்கம் சென்னை, காளி' படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி கடைசியாக ‛காதலிக்க நேரமில்லை' படத்தை இயக்கினார். இதற்கடுத்து இவர் ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். இதில் விஜய் சேதுபதியை ஹீரோவாக நடிக்க வைக்க பேசி வந்தனர். ஆனால் விஜய் சேதுபதி கைவசம் அடுத்தடுத்து படங்கள் இருப்பதால் கால்ஷீட் கொடுப்பதில் சிக்கல் நீடித்தது. இப்போது விஜய் சேதுபதி தான் நடித்து வரும் இரண்டு படங்களை நடித்து முடித்த பிறகு கிருத்திகா இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் தர சம்மதம் தெரிவித்துள்ளாராம். இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் என்ற நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பை அடுத்தாண்டு தொடங்க திட்டமிட்டுள்ளனர்.