உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தென்னிந்திய சினிமா தான் 'பெஸ்ட்', ஹிந்தியில் 'ஸ்லோ': ஷ்ரத்தா தாஸ்

தென்னிந்திய சினிமா தான் 'பெஸ்ட்', ஹிந்தியில் 'ஸ்லோ': ஷ்ரத்தா தாஸ்


பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ், ஹிந்தி மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த 'சர்ச்: தி நைனா மர்டர் கேஸ்' எனும் வெப் தொடரில் நடித்திருந்தார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், தென்னிந்திய சினிமா மற்றும் ஹிந்தி சினிமாவிற்கு இடையிலான வித்தியாசம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில் ஷ்ரத்தா தாஸ் கூறியதாவது: நான் எந்தவொரு சினிமா பின்புலமோ, பெரிய அறிமுகமோ இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்தேன். முதலில் நான் பாடகியாகவே ஆசைப்பட்டேன். இசை ஆல்பம் ஒன்றில் பணியாற்றியபோது ஒருவர் என்னை திரைப்படத்தில் நடிகையாக ஒப்பந்தம் செய்தார். அதற்குள் அவர் இறந்துவிட்டதால் அப்படம் நடக்கவில்லை. பின்னர் என்.எஸ்.டி எனப்படும் தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றேன். பின்னர் சுமார் 500 ஆடிஷன்களில் கலந்துகொண்டிருக்கிறேன்.

ஹிந்தியில் என் முதல் பெரிய படம் 'லாகூர்'. அப்படம் உருவாக நான்கு ஆண்டுகள் ஆனது. அந்த நேரத்தில், நான் சுமார் 13முதல் 15 படங்களில் ஒப்பந்தம் ஆனேன். கோபிசந்துடன் நான் நடித்த 'மொகுடு' தெலுங்கு படம் தான் என்னை திடீரென பிரபலமாக்கியது, அதன் பிறகு, நான் தொடர்ந்து பிஸியான நடிகையானேன்.

ஹிந்தி மற்றும் தென்னிந்திய சினிமாவிற்கு இடையில் உள்ள பெரிய வித்தியாசம் மக்கள் தொடர்பு (பி.ஆர்) தான். அங்கு பணம் கொடுத்து படங்​களைப் பப்​ளிசிட்டி செய்​யும் முறையைப் பயன்​படுத்​து​வ​தில்​லை. அவர்​கள் வேலை​யில் கவனம் செலுத்​துகிறார்கள். ஒரு படத்​தில் கையெழுத்​திட்​டதும் படப்​பிடிப்பு உள்​ளிட்ட மற்ற விஷ​யங்​கள் வேக​மாக நடக்​கும். படக்குழு​வைச் சந்​திக்​காமல் போனிலேயே படங்​களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறேன். ஆனால் ஹிந்தி சினிமாவில் எல்லாமே மெதுவாக தான் நடக்கும். நீங்கள் தொடர்ந்து ரசிகர்கள் பார்வையில் இருக்க வேண்டும்.

தென்னிந்தியாவில் ரசிகர்கள், சினிமா கலைஞர்களுடன் அவ்வளவு ஒன்றியிருப்பார்கள். ஒரு நடிகை ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்திருந்தால் கூட அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அவர்களின் படங்களை பார்க்க பல மைல்கள் கடந்து சென்றும் பார்ப்பார்கள். இந்த வகையான விசுவாசம் எல்லாம் கிடைப்பது அரிது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !