நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛மிடில் கிளாஸ்' : டீசர் வெளியீடு
ADDED : 6 minutes ago
காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்த முனீஸ்காந்த் முதன்முறையாக கதையின் நாயகனாக களமிறங்கி உள்ள படம் ‛மிடில் கிளாஸ்'. ‛சென்னை 28' விஜயலட்சுமி நாயகியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கி உள்ளார். ராதாரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்பு, தேவை, கனவுகள், பிரச்னைகளை காமெடியாக சொல்லும் படமாக உருவாகி உள்ளது. மேலும் இத்திரைப்படத்தை வருகின்ற நவம்பர் 21ந் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.