உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெப் தொடரான கார்கில் போர்

வெப் தொடரான கார்கில் போர்

கார்கில் போரை மையமாக வைத்து ஏராளமான ஹிந்திப் படங்கள் வெளிவந்தது. இந்த போரில் இந்திய விமானப் படையின் பங்கு மிக முக்கியமானது. இதனால் கார்கில் போரில் இந்திய விமானபடையின் பங்கை விவரித்து 'ஆபரேஷன் சபேத் சாகர்' என்ற வெப் தொடர் உருவாகி உள்ளது.

இந்த தொடரை அபிஜீத் சிங் பர்மர் மற்றும் குஷால் ஸ்ரீவஸ்தவா தயாரித்துள்ளனர். ஓனி சென் இயக்கியுள்ளார். சித்தார்த், ஜிம்மி ஷெர்கில், அபய் வர்மா, மிஹிர் அஹுஜா, தாருக் ரெய்னா மற்றும் அர்னவ் பாசின் நடித்துள்ளனர். இந்த தொடரை நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது. இந்த தொடரின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !