47 வயது மஞ்சு வாரியர் பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்டார்
ADDED : 26 minutes ago
மலையாள சினிமாவில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருபவர் மஞ்சு வாரியர். தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் நடித்தவர், அதன்பிறகு துணிவு, விடுதலை 2, வேட்டையன் போன்ற படங்களிலும் நடித்தார். 47 வயதாகும் மஞ்சு வாரியர் இப்போதும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் தனது உடல்கட்டை பராமரித்து வருகிறார். தன்னுடைய இளமை ரகசியம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு நாளும் தவறாமல் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதோடு, நடனமும் ஆடுகிறேன். இந்த இரண்டும் தான் உடல் ரீதியாக நான் செய்யக்கூடிய பயிற்சிகள். இது தவிர தொடர்ந்து உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறேன். இவற்றை தவறாமல் பின்பற்றி வருவதினால்தான் என் உடல் வெயிட் போடாததோடு, நான் இளமையாகவும் இருக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார் மஞ்சு வாரியர்.