ஷாரூக்கானின் கிங் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்கள்
ADDED : 40 minutes ago
பதான், ஜவான் படங்களுக்கு பிறகு கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஷாரூக்கான். அவருடன் தீபிகா படுகோனே, சுஹானா கான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். ஆக்ஷன் கதையில் உருவாகும் இந்த படத்தில் பிரமாண்டமான ஆறு சண்டை காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், ஒவ்வொரு சண்டை காட்சிகளும் சர்வதேச அளவில் படமாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இதுவரை தான் நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட ஆக்ஷன் அவதாரத்தை இந்த படத்தில் ஷாருக்கான் எடுத்துள்ளராம். கிங் படத்தில் ஹாலிவுட் மற்றும் தென்கொரியாவை சேர்ந்த சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அப்படக் குழு அறிவித்திருக்கிறது.