உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நவம்பர் 24 முதல் ‛அரசன்' படப்பிடிப்பு ஆரம்பம்

நவம்பர் 24 முதல் ‛அரசன்' படப்பிடிப்பு ஆரம்பம்

சிம்பு நடிப்பில் அரசன் என்ற படத்தை இயக்கப் போகிறார் வெற்றிமாறன். எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் புரொமோ சமீபத்தில் வெளியான நிலையில் அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை படப்பிடித்து தொடங்கப்படவில்லை. இந்நிலையில் அரசன் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 24ம் தேதி முதல் தொடங்கும் என்று இயக்குனர் தெரிவித்திருக்கிறார். வட சென்னை கதையில் உருவாகும் இந்த கேங்ஸ்டர் படத்தில் சிம்பு இரண்டு விதமான கெட்டப்பில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை மூன்று மாதங்களில் நடத்தி முடித்துவிட்டு 2026ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !