நவம்பர் 14ல் நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் டியூட்
ADDED : 5 hours ago
ரவி மோகன் நடித்த கோமாளி படத்தில் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன், அதையடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்தார். அந்த படம் 100 கோடி வசூலித்ததை அடுத்து அவர் நடித்த டிராகன் படம் 150 கோடி வசூலித்த நிலையில், தற்போது டியூட் படம் 100 கோடி வசூலை கடந்துள்ளது. கீர்த்தீஸ்வரன் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். இந்த படம் அக்டோபர் 17ம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வருகிற நவம்பர் 14ம் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.