உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிக்பாஸ் மலையாளம் சீசன் 7 டைட்டில் வென்ற சீரியல் நடிகை அனுமோல்

பிக்பாஸ் மலையாளம் சீசன் 7 டைட்டில் வென்ற சீரியல் நடிகை அனுமோல்


மலையாளத்தில் இந்த வருட பிக்பாஸ் சீசன் 7, இங்கே தமிழ சீசன் துவங்குவதற்கு கொஞ்சம் முன்னதாகவே துவங்கி நடைபெற்று வந்தது. கடந்த சீசன்களை போல இந்த சீசனிலும் மோகன்லால் இந்த நிகழ்ச்சியை திறம்பட நடத்தி முடித்துள்ளார். இந்த 7வது சீசனில் விளம்பரப் படம் மற்றும் டிவி சீரியல் நடிகையுமான அனுமோல் ஆர்.எஸ் என்பவர் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றுள்ளார்.

பொதுவாகவே பிக்பாஸ் சீசன்களில் வெற்றியை நோக்கி செல்பவர்களுக்கே ஏற்படக்கூடிய பல எதிர்ப்புகளையும் இடைஞ்சல்களையும் இந்த சீசனில் இவர் சந்தித்தாலும் தொடர்ந்து மக்களின் ஆதரவுடன் இந்த டைட்டிலை வென்றுள்ளார். இவருக்கு 50 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 42 லட்சத்து 55 ஆயிரத்து 210 ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு விலை உயர்ந்த ஒரு கார் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்ததாக சோசியல் மீடியா பிரபலமான அனீஸ் என்பவர் மன்னராக இரண்டாவது பரிசை பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !