உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிக்கலில் ‛காந்தா' : தடை கோரி வழக்கு

சிக்கலில் ‛காந்தா' : தடை கோரி வழக்கு

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‛காந்தா'. பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரகனி, ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற 14ம் தேதி படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸாகிறது. இப்படம் மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதர் மற்றும் பத்திரிக்கையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கு பின்னணியில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தியாகராஜ பாகவதர் குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதுதொடர்பாக தியாகராஜ பாகவதரின் பேரன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இந்த படத்தில் தியாகராஜ பாகவதர் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தியாகராஜ பாகவதரின் சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து அனுமதி வாங்கிய பின்பே படத்தை திரையிட வேண்டும் என்றும், அதுவரை இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பதிலளிக்க கோரி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான துல்கர் சல்மானுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !