டிரெயின் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல்
ADDED : 224 days ago
எஸ்.தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'டிரெயின்'. இதில் ஜெயராம், நாசர், டிம்பிள் ஹயாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரிலீஸிற்கு தயாராகி ஒரு வருடம் ஆகிறது. ஆனாலும், இந்த படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் உள்ளிட்ட வியாபாரங்கள் தேங்கி நிற்பதால் இப்படம் ரிலீஸில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு டிஜிட்டல், சாட்டிலைட் வியாபாரம் தேங்கி நின்றாலும் பரவாயில்லை, படத்தை வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். லேட்டஸ்ட் தகவல்படி இந்த படத்தை இம்மாதம் 28ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.