உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 10 வருடங்களுக்கு பிறகு தாயின் மனக்குறையை தீர்த்து வைத்த மாளவிகா மோகனன்

10 வருடங்களுக்கு பிறகு தாயின் மனக்குறையை தீர்த்து வைத்த மாளவிகா மோகனன்

பேட்ட, மாஸ்டர் படங்களின் மூலம் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து இங்கே தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். தற்போது தெலுங்கிலும் பிரபாஸ் ஜோடியாக இணைந்து ராஜா சாப் என்கிற படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பாரிஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார் மாளவிகா மோகனன். இந்த முறை தனது தாயுடன் இணைந்து அவர் பாரிஸை சுற்றிப் பார்த்துள்ளார். அது குறித்த புகைப்படங்களையும் அவர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த பயணம் குறித்து அவர் கூறும்போது, “பத்து வருடங்களுக்கு முன்பு நானும் என் அம்மாவும் பாரிஸுக்கு வந்திருந்தோம். ஆனால் அப்போது மழை சீசன் என்பதால் எங்கேயும் வெளியே செல்ல முடியாமல் இரண்டு நாட்கள் ஹோட்டலிலேயே அடைந்து கிடந்தோம். அப்போது பாரிஸை சுற்றி பார்க்க முடியவில்லை என்கிற மனக்குறை என் அம்மாவுக்கு நீண்ட நாட்களாக இருந்தது. அதனால் தான் இந்த முறை அவரை பாரிஸுக்கு அழைத்து வந்து அவருக்கு பல இடங்களை சுற்றி காட்டினேன். எனக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு இதுபோன்ற பயணம் மேற்கொள்ள தயங்குவதில்லை” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !