அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி!
ADDED : 27 minutes ago
'அங்காடி தெரு, மாஞ்சா வேலு, கல்லூரி காலங்கள், தெய்வத்திருமகள், வேலாயுதம், சாட்டை, ஜில்லா' உள்பட பல படங்களில் நடித்தவர் பிளாக் பாண்டி. சின்னத்திரையிலும் 'கோலங்கள், கனா காணும் காலங்கள்' என பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் 'உதவும் மனிதம்' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார் பிளாக் பாண்டி. இதன்மூலம் இதுவரை 75 பேருக்கு மேல் தான் படிக்க வைத்திருப்பதாக கூறும் அவர், 'தற்போது கூட நான்கு இலங்கை மாணவிகளை கல்லூரியில் படிக்க வைத்துள்ளேன். நான் பத்தாவது மட்டுமே படித்துள்ளேன். அந்த பத்தாம் வகுப்பிலும் பெயில் ஆகிவிட்டேன். அதன் காரணமாக என்னுடைய தங்கையை பட்டப்படிப்பு படிக்க வைத்த நான், இப்போது இந்த அறக்கட்டளை மூலம் பல ஏழை எளிய மாணவ மாணவிகளை படிக்க வைத்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்' என்கிறார் பிளாக் பாண்டி.