25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா?
ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' படம் கலவையான விமர்சனங்களை சந்தித்த நிலையில் தற்போது அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'டிசி' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க லோகேஷ் கனகராஜ் 35 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ஆனால் கோலிவுட்டில் விசாரித்தால் இந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை. இது ஒரு மிகப்பெரிய வதந்தி என்பது தெரிய வந்துள்ளது. காரணம் லோகேஷ் கனகராஜ் நடித்து வரும் டிசி படம் 25 கோடி பட்ஜெட்டில் தான் தயாராகி வருகிறது.
அப்படி இருக்கும் போது அவர் எப்படி 35 கோடி சம்பளம் வாங்க முடியும். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. மேலும் லோகேஷ் கனகராஜை பொருத்தவரை அடுத்து ஹீரோவாகவும் தன்னை சினிமாவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார். அதனால் இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு 'கைதி-2' படத்தை இயக்குபவர், அதன் பிறகு மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவும் திட்டமிட்டுள்ளார். தற்போது அவர் ஹீரோவாக நடித்து வரும் இந்த டிசி படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என்றும் கூறுகிறார்கள்.