புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்!
ADDED : 2 minutes ago
நடிகர் ரியோ ராஜ், 'ஜோ,'ஸ்வீட் ஹார்ட், நிறம் மாறும் உலகில்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'ஆண் பாவம் பொல்லாதது' படம் வெற்றி படமாக அமைந்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ரியோ ராஜ் மூன்று புதிய படங்களை ஒப்பந்தம் செய்துள்ளார். அதன்படி, ரியோ ராஜ் முதலில் ஒப்பந்தம் செய்துள்ள படத்தை அறிமுக இயக்குநர் ராம் என்பவர் இயக்க ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கின்றார். இது அல்லாமல் ரியோ ராஜை வைத்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் ஆகியோரும் படத்தை தயாரிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.