ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட்
சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, தேவயானி, விஜயலட்சுமி, வடிவேலு உட்பட பலர் நடித்த, காமெடி படம் ப்ரண்ட்ஸ். 2001ம் ஆண்டு வெளியான இந்த படம் இன்றும் காமெடி காட்சிகளுக்காக பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்குபின் ப்ரண்ட்ஸ் படம் நவம்பர் 21ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. சென்னையில் நடந்த ரீ ரிலீஸ் விழாவில் விஜய், சூர்யா, தேவயானி, விஜயலட்சுமி, வடிவேலு, சார்லி என யாருமே கலந்து கொள்ளவில்லை.
நடிகர் ரமேஷ் கண்ணா மட்டுமே வந்திருந்து பேசினார். அவர் பேசுகையில் ''இந்த படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தபோது, தெனாலியிலும் நடித்து வந்தேன். அப்போது சூர்யா, ஜோதிகா இருவரும் தங்கள் ஆட்களை பற்றி என்னிடம் விசாரிக்க சொல்வார்கள். இயக்குனர் சித்திக் திறமைசாலி ஒரு டயலாக்கை கூட மாத்தவிடமாட்டார். ஒரு டயலாக்கை கூட எக்ஸ்ட்ரா போட விடமாட்டார். அவருக்கு துணையாக கோகுலகிருஷ்ணா என்ற ரைட்டர் இருந்தார். அவர்தான் தமிழ் டயலாக் இவ்வளவு அழகாக வரக்காரணம்' என்றார்.
சித்திக், கோகுல கிருஷ்ணா இருவரும் மறைந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாவதற்கும் வடிவேலு ரீ ரிலீஸ் குறித்து வீடியோ வெளியிடுவார் என்பது கேள்வியாக இருக்கிறது. இந்த படத்தில் அவர் நடித்த நேசமணி கேரக்டர் சில ஆண்டுகளுக்கு முன்பு கூட வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.