வாசகர்கள் கருத்துகள் (1)
100% correct. You can be super director but you must respect others values and beliefs.
'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது 'வாரணாசி' என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இதில் மகேஷ்பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ஸ் வீடியோ வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. கிளிம்ஸ் வீடியோ ஒளிபரப்பியபோது சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது.
அதன்பிறகு பேசிய இயக்குனர் ராஜமவுலி, ''எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், என் அப்பா எப்போதும் நான் அனுமனால் ஆசிர்வதிக்கப்பட்டு வருவதாக கூறுவார். என் மனைவியும் அனுமன் பக்தை. ஹனுமனை தனது நண்பன் போல நினைத்து அவருடன் பேசி கொண்டிருப்பார் என் மனைவி.
இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோது எனக்கு அவர்கள் மீது கடுமையாக கோபம் வந்தது. இப்படித்தான் அனுமன் எனக்கு உதவுவாரா? என் மனைவியின் நண்பன் அனுமன் இந்த முறையாவது எனக்கு இதை சரிசெய்வாரா” என பேசினார்.
இந்நிலையில், ராஜமவுலி, இந்து கடவுளான அனுமனை அவமதித்து விட்டதாக இந்து அமைப்பினர் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
100% correct. You can be super director but you must respect others values and beliefs.