என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக டிராகன் படத்தில் நடித்து பிரபலமானவர் கயாடு லோஹர். அதைத் தொடர்ந்து அதர்வாவுக்கு ஜோடியாக இதயம் முரளி மற்றும் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக இம்மோர்ட்டல் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் அளித்த ஒரு பேட்டி குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், நள்ளிரவு பார்ட்டிக்கு சென்ற தனக்கு, லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாக தயாரிப்பாளர் ஒருவர் அமலாக்கத்துறையிடம் கூறியதாக பரவி வரும் தகவல் குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறுகையில், சினிமாவில் நடிக்க வந்த பிறகு என்னைப் பற்றி சோசியல் மீடியாவில் பலதரப்பட்ட வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. அதில், நள்ளிரவு பார்ட்டிக்கு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக வெளியான இந்த வதந்தி என்னை பெரிய அளவில் வேதனைக்கு உள்ளாக்கிவிட்டது. எந்த ஒரு தவறையும் செய்யாமல் சினிமாவில் ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி ஏன் இது போன்று தவறான செய்திகள் பரப்புகிறார்கள்? எதற்காக என்னை இப்படி டார்கெட் செய்கிறார்கள்? என் மீது அவர்களுக்கு ஏன் இத்தனை வன்மம் என்று தனது வேதனையை கேள்விகளாக கொட்டியுள்ளார் கயாடு லோஹர் .