தமிழுக்கு வரும் துளு நடிகை
ADDED : 8 minutes ago
மகேந்திரா பிலிம் பேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் 'இரவின் விழிகள்'. சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார்.
கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் துளு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். துளு மொழியில் இவர் நடித்து வெளியான 'பங்காரா' என்ற படம் தேசிய விருது பெற்றது.
'இரவின் விழிகள்' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். அவருடன் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.எம்.அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.