பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார்
ADDED : 30 minutes ago
மலையாளத்தில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் 'ஷியாமா'. இதில் ஷியாமா என்கிற டைட்டில் கேரக்டரில் நடித்தவர் நதியா. மம்முட்டி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதாவது ஒரு சினிமா இயக்குனராக நடித்திருந்தார், அவரை காதலிக்கும் இளம்பெண்ணாக நதியா நடித்திருந்தார். ஆனால் அவர் காதலை மும்முட்டி ஏற்க மாட்டார். அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கும். இப்படி போகும் கதை.
இதே படம் தமிழில் 'உனக்காகவே வாழ்கிறேன்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் மம்முட்டி நடித்த கேரக்டரில் சிவகுமார் நடித்தார். இதிலும் நதியாவே நடித்தார். கே.ரங்கராஜ் இயக்கினார். இளையராஜா இசை அமைத்தார். புகழ்பெற்ற 'கண்ணா உன்னை தேடுகிறேன் வா' என்ற பாடல் இந்த படத்தில் இடம்பெற்றது. ஆனால் படம் வெற்றி பெறவில்லை.