கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி
கடந்த மார்ச் மாதம் மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் அவர்களது கூட்டணியில் ஏற்கனவே உருவாகியிருந்த லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் திரைப்படம் வெளியானது. முதல் பாகத்தை போல பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் 200 கோடி வசூல் இலக்கை தாண்டியது. அதேசமயம் படம் வெளியாகின்ற சமயத்தில் இந்த படம் இந்துமத உணர்வாளர்களை புண்படுத்தும் விதமாக இருக்கிறது என்று எதிர்ப்புக் குரல் கிளம்பியது. இதைத் தொடர்ந்து இந்த படத்தில் சில முக்கிய காட்சிகளை நீக்க வேண்டும் என சென்சார் அதிகாரிகள் நிபந்தனை விதித்தனர்.
இந்த சமயத்தில் நடிகரும், தற்போதைய மத்திய இணை அமைச்சருமான சுரேஷ்கோபி இந்த பிரச்னையில் தலையிட்டு ஓரளவுக்கு சமூகமாக இந்த படம் வெளிவர உதவினார். அதுமட்டுமல்ல கேரளாவில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இருந்தும் சிறப்பு அனுமதியும் பெற்று கொடுத்தேன் என்றும் சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்டபோது பேசினார் சுரேஷ்கோபி.
ஆனால் இந்த படத்தின் கதை இந்த அளவிற்கு சர்ச்சையாகும் என்று எனக்கு தெரியாது. காரணம் கதை என்னவென்று தெரியாமல் தான் நான் சென்சார் சான்றிதழை சுமுகமாக பெற உதவி செய்தேன். பின்னர் அது தெரிய வந்தபோது தான் படத்தில் எனக்காக போடப்பட்டிருந்த நன்றி கார்டை வேண்டாம் என கூறி எடுக்கச் சொல்லிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.