கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு
'மிஸ் இந்தியா' அழகி போட்டியில் டைட்டில் வென்றதன் மூலம் நடிகை ஆனவர் செலினா ஜெட்லி. ஏராளமான இந்தி படங்களிலும், சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும், 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பீட்டர் ஹாக் என்று தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆனார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், தனது கணவர் பீட்டர் ஹாக் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை வழக்கு தொடர்ந்துள்ளார். கணவர் தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும் இதனால், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக 50 கோடி இழப்பீடை பீட்டர் ஹாக் வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்யும்படி பீட்டர் ஹாக்கிற்கு உத்தரவிட்டுள்ளது.