தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா
ADDED : 23 minutes ago
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வாரணாசி'. 2027ல் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம்தான் படப்பிடிப்பு முடிவடையப் போகிறது.
இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரியங்காவுக்கு தெலுங்கு தெரியாது. மிகப்பிரம்மாண்டமான படம் என்பதால் இப்படத்தில் தெலுங்கைப் புரிந்து கொண்டு பேசி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைத்தாராம். அதனால் தெலுங்கு கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.
படம் முடிந்த பின் சொந்தக் குரலில் தெலுங்கில் டப்பிங் பேச வேண்டும் என்பது பிரியங்காவின் ஆசையாம். அதற்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் அதற்குள் தெலுங்கு கற்றுக் கொள்ளலாம் என்ற முயற்சியில் இருக்கிறார் பிரியங்கா.