உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி

9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவர் நடித்துள்ள வா வாத்தியார், சர்தார் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. ஏற்கனவே நாகார்ஜுனா உடன் இணைந்து 'தோழா' என்ற படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவில்லை. இப்போது 9 வருடங்கள் கழித்து மீண்டும் தெலுங்கு, தமிழ் என இரு மொழி படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வாத்தி படத்தை தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதை தெலுங்கில் மேட் என்கிற படத்தை இயக்கிய கல்யாண் சங்கர் என்பவர் இயக்குகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !