உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்?

ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்?


ஏவிஎம் நிறுவனம் 175 படங்களை தயாரித்து இருந்தாலும், சில ஆண்டுகளாக படத்தயாரிப்பில் ஈடுபடுவது இல்லை. அவர் பேத்திகள் அபர்ணா, அருணா ஆகியோர் வெப்சீரிஸ் தயாரித்தனர். படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன் என்று கேள்விக்கு 'இப்போது படத்தயாரிப்பு செலவு, நடிகர்கள் சம்பளம் அதிகமாகிவிட்டது. லாபம் குறைவு என்பது மட்டுமல்ல, தயாரிப்பாளர்களுக்கு மரியாதையும் குறைவாக இருப்பதால் பட தயாரிப்பை நிறுத்திவிட்டோம்' என்று தனது நண்பர்களிடம் ஏவிஎம் சரவணன் பதில் அளித்து இருக்கிறார்.

ஒரு பிரபல ஹீரோ அவரிடம் சம்பளத்துக்கு பதில் ஏவிஎம் சொத்து ஒன்றை கேட்க, அப்படிப்பட்ட படம் தேவையில்லை என தைரியமாக சொல்லியிருக்கிறார். அதேபோல் படம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நன்றாக செலவு செய்பவர், தேவையற்ற செலவுகள் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பார்.

அதேபோல் பட விளம்பரத்தில் தனி கவனம் செலுத்துவார். 'ஜெமினி' படத்தில் இடம் பெற்ற ஓ போடு பாடல் ஹிட்டாக, அதை இன்னும் பிரபலமாக்கி, படத்தின் வசூலை அதிகரிக்க பல விஷயங்கள் செய்தார். எல்லா பேட்டிகளிலும் தனது அப்பா ஏ.வி.மெய்யப்ப செட்டியாரை உயர்வாக பேசுவார். அவருடைய உயிர் நண்பராக, தீவிர விசுவாசியாக இருந்தவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். அவர் மீது சரவணன் மிகுந்த மதிப்பு வைத்து இருந்தார். அவருக்கு ஏவிஎம் ஸ்டூடியோவில் தனி அறை கொடுத்தார். அவரை தங்கள் படங்களில் இணைத்தயாரிப்பாளர் ஆக்கி கவுரவம் செய்தார் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !