உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்!

'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்!


ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து 'பாகுபலி தி எபிக்' என்ற படத்தை கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியிட்டார்கள். இந்த நிலையில் வருகிற டிசம்பர் 12ஆம் தேதி இந்த படத்தை ஜப்பானிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதனால் அங்கு டிசம்பர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு பிரீமியர் காட்சிகள் திரையிடப்படுகிறது. அதற்காக ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ளார் பிரபாஸ்.

இதற்கு முன்பு 'கல்கி 2898 ஏடி' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது ஜப்பான் ரசிகர்களை சந்திக்காத நிலையில் இப்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அங்குள்ள தனது ரசிகர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார் பிரபாஸ். இதன் காரணமாக 'தி ராஜா சாப்' படத்தை அடுத்து சந்தீப்ரெட்டி வங்கா இயக்கத்தில் டிரிப்டி டிம்ரியுடன் இணைந்து நடித்து வந்த 'ஸ்பிரிட்' படப்பிடிப்பை நிறுத்தி வைத்துவிட்டு, ஜப்பான் புறப்பட்டு உள்ளார் பிரபாஸ். அவர் திரும்பி வந்ததும் மீண்டும் ஸ்பிரிட் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !