மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள்
ADDED : 6 minutes ago
மம்முட்டி நடிப்பில் நாளை (டிசம்பர் 5) மலையாளத்தில் வெளியாக இருக்கும் படம் களம்காவல். இந்த படத்தை ஜிதின் கே ஜோஸ் இயக்கியுள்ளார். வில்லன் நடிகரான விநாயகன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, மம்முட்டி எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆச்சரியமாக, சொல்லப்போனால் மலையாள சினிமாவில் முதன்முறையாக என்று சொல்லும் அளவிற்கு 22 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
குறிப்பாக ரஜிஷா விஜயன், ஸ்ருதி ராமச்சந்திரன், காயத்ரி அருண், மாளவிகா மேனன் உள்ளிட்ட முக்கிய கதாநாயகிகளுடன் ஏற்கனவே சில படங்களில் கதாநாயகிகளாக நடித்த இன்னும் சில நடிகைகளும் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.