உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்!

மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்!


சமீபத்தில் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மரணமடைந்தார். அப்போது சோசியல் மீடியாவில் பல வகையான செய்திகளை மீம்ஸ்ஸாக வெளியிட்டார்கள். இந்த நிலையில் அது குறித்து ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்விகபூர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், ''என்னுடைய தாயார் ஸ்ரீதேவி இறந்தபோதும் சோசியல் மீடியாவில் அவரைப் பற்றி பலதரப்பட்ட செய்திகள் மீம்ஸாக வெளியானது. அதையடுத்து நான் கூட என் தாயின் மரணம் குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை. அப்படி நான் வெளியிட்டால் அதை வைத்துக் கூட நான் விளம்பரம் தேட முயற்சிப்பதாக சோசியல் மீடியாவில் செய்தி பரப்பி இருப்பார்கள். அதன் காரணமாகவே என் தாயார் குறித்து பேட்டிகளில் பேசுவதைக் கூட நான் தவிர்த்து வருகிறேன்.

எந்த விஷயமாக இருந்தாலும் அதை வெளிப்படையாக பேசுவதற்கு ரொம்ப பயமாக உள்ளது. இன்றைக்கு சோஷியல் மீடியாவில் அந்த அளவுக்கு ஆளாளுக்கு மீம்ஸ்களை வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களை வேதனை படுத்திக் கொண்டு வருகிறார்கள்'' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் ஜான்வி கபூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !