உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல்

ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல்

பிரம்மாண்டமான திரை அனுபவத்தைக் கொடுக்கும் தியேட்டர்கள் ஐமேக்ஸ் தியேட்டர்கள். உலக அளவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மட்டுமே அமைந்துள்ளது. சென்னையில் இரண்டு ஐமேக்ஸ் தியேட்டர்களும், கோவையில் ஒரு ஐமேக்ஸ் தியேட்டர்களும் தான் உள்ளன. சினிமாவிற்குப் பெயர் போன தெலுங்கு மாநிலங்களில் ஒரு ஐமேக்ஸ் தியேட்டர்கள் கூட இல்லை.

முன்னணி நடிகர்களின் படங்களை கிடைக்கும் ஐமேக்ஸ் தியேட்டர்களில் வெளியிடுவது வழக்கம். ஆனால், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள தமிழ்ப் படமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்', தெலுங்குப் படமான பிரபாஸ் நடித்துள்ள 'த ராஜா சாப்' ஆகிய படங்களுக்கு அமெரிக்காவில் ஐமேக்ஸ் தியேட்டர்கள் கிடைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் ரசிகர்களைக் கவர்ந்த 'அவதார்' சீரிஸின் 'அவதார் 3' படமான 'தி பயர் அன்ட் ஆஷ்' படம் டிசம்பர் 19ம் தேதி அமெரிக்காவில் வெளியாகிறது. அப்படத் தயாரிப்பு நிறுவனத்துடன் ஐமேக்ஸ் நிறுவனம் நான்கு வாரங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அதற்கடுத்து ஒரு மாதங்களுக்கு வேறு எந்த ஒரு படங்களுக்கும் ஐமேக்ஸ் தியேட்டர் கிடைக்க வாய்ப்பில்லை.

அமெரிக்காவில் விஜய், பிரபாஸ் நடித்து வெளியாகும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அந்தப் படங்களை தற்போது அங்கும் ஐமேக்ஸ் தியேட்டர்களில் திரையிட வாய்ப்புகள் இல்லை. இந்தியாவில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டர்களில் 'அவதார் 3' படத்திற்கான முன்பதிவு இப்போதே ஆரம்பமாகிவிட்டது. இப்படத்திற்காக, இந்தியாவில் ஐமேக்ஸ் தியேட்டர்களுக்கான ஒப்பந்தம் இரண்டு வாரங்களுக்கு போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !