ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ்
ADDED : 130 days ago
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் ஜனநாயகன். பொங்கலுக்கு திரைக்கு வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் பிரமாண்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது . இந்த அரங்கத்தில் 85 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்க முடியுமாம். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முந்தைய வியாபாரம் தொடங்கியுள்ள நிலையில், இதுவரை 350 கோடி வரை வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. அதோடு ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் சேனல் 60 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில், இப்படம் விஜயின் கடைசி படம் என்பதால் முக்கிய ஏரியாக்களை வாங்குவதில் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் போட்டி ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.