மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித்
ADDED : 11 minutes ago
தற்போது மலேசியாவில் செபாங்கில் என்ற பகுதியில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் ரேஸிங் அணி பங்கேற்றது. அப்போது மலேசியாவிலுயுள்ள ஏராளமான ரசிகர்கள் அஜித்தை காண அங்கு படையெடுத்துள்ளார்கள். அப்படி தன்னை தேடி வந்த ரசிகர்கள் பலரும் தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பியதால் அவர்கள் அனைவருடனும் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கொண்ட அஜித், பின்னர் அவர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியே புகைப்படம் எடுப்பதற்கு போஸ் கொடுத்துள்ளார். இது குறித்து வீடியோவில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு இயக்குனர் சிறுத்தை சிவா அஜித்துடன் தோன்றும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.