உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது

வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் வா வாத்தியார். கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். கார்த்தியின் 26 வது படமான இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் என முதலில் அறிவிப்பு வந்தது. பின்னர் டிச., 12ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வாங்கிய கடன் பிரச்னையால் இப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கிடையே இன்று இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . அதில் எம்ஜிஆர் ரசிகராக ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. காதல், மோதல், ஆக் ஷன் என ஒரு கமர்சியல் கலவையாக இந்த படம் உருவாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !