உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல்

டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல்

எஸ் தாணு தயாரிக்க, வெற்றிமாறன் இயக்க, அனிருத் இசையமைக்க, சிலம்பரசன் நாயகனாக நடிக்கும் 'அரசன்' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னோட்ட வீடியோவுடன் அக்டோபர் மாதம் வெளியானது. புதிய கூட்டணி என்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. அந்த முன்னோட்ட வீடியோ 30 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியுள்ளது.

அறிவிப்பு வந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு எப்போதும் ஆரம்பமாகும் என்பது தெரியாமல் இருந்தது. அதில் சில சிக்கல்கள் எழுந்ததாகச் சொன்னார்கள். அவையெல்லாம் தற்போது தீர்த்து வைக்கப்பட்டு டிசம்பர் 9ம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்ற தகவல் வெளியானது. அந்தத் தகவல் தற்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிம்பு பேசும் போது, டிசம்பர் 9ம் தேதி முதல் 'அரசன்' படப்பிடிப்பு மதுரையில் ஆரம்பமாகிறது. இங்கிருந்தே நேராக படப்பிடிப்புக்குப் போகிறேன்,” என்று பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !