ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ்
ADDED : 4 minutes ago
மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகவுரி பிரியா நடிக்கும் படத்துக்கு ஹேப்பிராஜ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் கூறுகையில் 'படத்தில் ஹீரோ பெயர் ஹேப்பி. படத்திலும் இந்த பெயர் ஏகப்பட்டமுறை ஒலிக்கும். நம்பிக்கையுடன் போராடுபவர்களுக்கான கதை இது. ஸோ, இந்த தலைப்பு. சில உண்மை சம்பவம் அடிப்படையில் படம் உருவாகிறது. நீண்ட இடைவெளிக்குபின் அப்பாஸ் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார் என்றார்.
இந்த படங்கள் தவிர, இடி முழக்கம், மெண்டல் மனதில், இம்மாறல் ஆகிய படங்களிலும் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து வருகிறார்.