உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு

தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு

நடிகர் தனுஷ் தற்போது போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். இது தனுஷின் 54வது படமாக உருவாகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ் மற்றும் மலையாள நடிகர்கள் ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் .

கடந்த மூன்று மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னை, ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் படமாக்கி வருகின்றனர். 100 நாட்களுக்கு மேல் இதன் படப்பிடிப்பு கடந்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது என்கிறார்கள். இந்த நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுராஜ் வெஞ்சாரமூடு அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷ் மற்றும் இயக்குனருடன் அவர் எடுத்துக்கொண்ட போட்டோ உடன் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !