ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2
ADDED : 6 minutes ago
கடந்த ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்து பான் இந்திய படமாக வெளியான படம் 'புஷ்பா 2' . இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைத்தது. இந்த நிலையில் புஷ்பா 2 படத்தை ஜப்பானில் வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் ஜப்பானில் ஜனவரி மாதத்தில் திரைக்கு வருகிறது என விளம்பர போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் இந்தியாவில் வசூல் ரீதியாக ஆர்.ஆர்.ஆர், பாகுபலி ஆகிய படங்களின் வசூலை முறியடித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.