உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிசம்பர் 19ல் ‛கொம்புசீவி' ரிலீஸ்: இதிலாவது ஜெயிப்பாரா விஜயகாந்த் மகன்?

டிசம்பர் 19ல் ‛கொம்புசீவி' ரிலீஸ்: இதிலாவது ஜெயிப்பாரா விஜயகாந்த் மகன்?


மறைந்த நடிகர் விஜயகாந்த் இளையமகன் சண்முகபாண்டியன் நடிக்க, ‛வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா' போன்ற கமர்ஷியல் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கிய ‛கொம்புசீவி' படம், டிசம்பர் 19ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸ் என அறிவித்த நிலையில் விக்னேஷ்சிவனின் ‛எல்.ஐ.கே' வெளியாகாத நிலையில், ஒரு வாரம் முன்னதாக இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

சண்முகபாண்டியன் அறிமுகம் ஆன ‛சகாப்தம்' படம் சரியாக போகவில்லை. அடுத்து அவர் நடிப்பில் வெளியான ‛மதுரவீரன், படைத்தலைவன்' ஹிட் ஆகவில்லை. இந்நிலையில், 4வதாக அவர் நடிப்பில் வெளியாக உள்ள இந்த படமாவது வெற்றி பெறணும் என விஜயகாந்த் ரசிகர்கள், குடும்பத்தினர் நினைக்கிறார்கள். இந்த படத்தில் சரத்குமார் முக்கியமான வேடத்தில் நடிக்க, ‛ஓ போடு' பாடல் புகழ் ராணி மகள் தர்னிகா ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். உசிலம்பட்டி ஏரியாவில் நடந்த ஒரு உண்மை சம்பவம் பின்னணியில் இந்த கதை உருவாகி உள்ளது. யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !