பிளாஷ்பேக் : ஹிந்திப் படத்தை ரீமேக் செய்த டி.ராஜேந்தர்
ADDED : 27 days ago
டி.ராஜேந்தர் இயக்கி படங்கள் பெரும்பாலும் அவர் எழுதிய கதைகள் தான். ஆனால் அவர் ஒரு ஹிந்தி படத்தை ரீமேக் செய்தார். சுபாஷ் கெய் இயக்கிய ஹிந்திப் படமான 'மெரி ஜங்க்' படத்தைத்தான் தமிழில் 'ஒரு தாயின் சபதம்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஹிந்திப் படத்தில் அனில் கபூர் நடித்த கேரக்டரில் டி.ராஜேந்தர் நடித்தார்.
இவர்கள் தவிர ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர், எஸ்.எஸ்.சந்திரன், நிழல்கள் ரவி, சாருஹாசன், குட்டி பத்மினி உள்ளிட்ட பலர் நடித்தார்கள். சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
ஹிந்தி படத்திற்கு லட்சுமிகாந்த் பியாரிலால் இசை அமைத்திருந்தார். இந்த படத்திற்கு டி.ராஜேந்தர் இசை அமைத்திருந்தார். கிரைம் திரில்லர் பாணியில் கோர்ட் டிராமாவாக இந்த படம் வெளிவந்தது.