உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் படம் 'அலெக்ஸாண்டர்' : புது அப்டேட்

யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் படம் 'அலெக்ஸாண்டர்' : புது அப்டேட்

தமிழ் சினிமாவில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த இசையமைப்பாளர்களில் யுவன் ஷங்கர் ராஜாவும் ஒருவர். தன்னுடைய 17வது வயதில் சரத்குமார், பார்த்திபன் நடிப்பில் 1997ல் வெளிவந்த 'அரவிந்தன்' படம் மூலம் இசையமைப்பாளார்க அறிமுகமானார் என்பதுதான் அவருடைய அறிமுகப் படத்திற்கான பதிவாக இருந்தது.

ஆனால், அதற்கு முன்னதாகவே 1996ல் விஜயகாந்த் நடித்து வெளிவந்த 'அலெக்ஸாண்டர்' படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார் என்ற தகவல் சமீபத்தில் நடந்த 'கொம்பு சீவி' பட இசை வெளியீட்டில் வெளியாகி உள்ளது.

நிகழ்ச்சியில் இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா பேசுகையில், 'அரவிந்தன்' படத்திற்கு இசையமைப்பதற்கு முன் அண்ணன் கார்த்திக் ராஜா இசையமைத்த 'அலெக்சாண்டர்' படத்திற்கு நான் பின்னணி இசையமைத்தேன். அப்போது தயாரிப்பாளர் சுப்பு பஞ்சு , தான் அந்தப் படத்திற்கு பின்னணி இசையமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அந்த படத்தில் ஒரு பாடலையும், பின்னணி இசையும் அமைத்தேன். இந்த வகையில் என்னுடைய திரையுலக பயணம் 'அலெக்ஸாண்டர்' படத்திலிருந்து தான் தொடங்கியது,” என்றார்.

எனவே, விக்கிவீடியோ, கூகுள் உள்ளிட்ட தளங்களும், யுவன் ரசிகர்களும் யுவனே சொன்ன இந்த புதிய அப்டேட்டைக் கொண்டு யுவனின் முதல் படம் 'அலெக்ஸாண்டர்' என பதிய வைத்துக் கொள்ளலாம். பாடல்களுக்கும் சேர்த்து முழு படத்திற்கான இசையாக அறிமுகமான படம் என 'அரவிந்தன்' படத்தைச் சொல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !