எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி
பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ள படம் ரெட்ட தல. மான் கராத்தே, கெத்து படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கி உள்ளார், சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, சாய்குமார், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற 25ம் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைய்லர் வெளியீட்டு விழா நடந்தது.
இதில் கலந்து கொண்டு நாயகி சித்தி இத்னானி பேசியதாவது: சிறிய இடைவெளிக்கு பிறகு தமிழில் நடித்துள்ள படம். சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும். இதனால் கூடுதல் பொறுப்பு இருப்பதாக உணருகிறேன். எனது முதல் தமிழ் படம் முடிந்ததும் கொஞ்சம் ரிலாக்ஸ் தேவைப்பட்டது. அதனால்தான் இந்த இடைவெளி.
சினிமாவில் மிக முக்கியமான விஷயம், பசி. இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அந்த பசிக்கான உணவு. செட்டில் ஆகிவிட்டோம் என்ற உணர்வே நம்மை வீழ்த்திவிடும். எனவே இந்த பசியையும், தேடலையும் முழுமையடைய செய்துவிடவே கூடாது. நான் பசி மிகுந்தவள்.
கதாநாயகி என்ற பெயரில் வந்துபோவது, டூயட் பாடுவது, காதல், ரொமான்ஸ் என்று சுற்றுவது இதெல்லாம் எனக்கு உடன்பாடில்லாதவை. வலிமையான, தகுதியான கதாபாத்திரங்களில் தான் நடிக்க நான் விரும்புகிறேன். அப்படித்தான் இந்த படத்தில் இணைந்தேன். என்றார்.