சிக்ரி சிக்ரி : 100 மில்லியனைக் கடந்த ஏஆர் ரஹ்மானின் முதல் தெலுங்குப் பாடல்
தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் எத்தனையோ சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். ஆனால், மற்ற தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் மிகக் குறைந்த அளவிலான படங்களுக்குத்தான் இசையமைத்துள்ளார்.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் அவர் இசையமைத்து வரும் படம் 'பெத்தி'. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'சிக்ரி சிக்ரி' பாடல் யு டியுப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. பாடல் வெளியான ஒரு மாதத்தில் இந்த சாதனையைப் புரிந்துள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்த தமிழ், ஹிந்தி பாடல்கள் சில 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன.
ஆனால், தெலுங்கில் அவர் இசையமைத்த பாடல் ஒன்று 100 மில்லியனைக் கடப்பது இதுவே முதல் முறை. புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் இப்படத்தில் நடிக்கிறார்கள். மற்ற மொழிகளையும் சேர்த்து இப்பாடல் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.