உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா ? போலி டாக்டரின் பதிவு குறித்து ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா ? போலி டாக்டரின் பதிவு குறித்து ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை


தமிழில் 'தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, இந்தியன் 2' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். கடந்த வருடம் தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் டாக்டர் பிரசாந்த் யாதவ் என்பவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங்கின் இரண்டு விதமான புகைப்படங்களை வெளியிட்டு அவர் தன்னிடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு உருவத் தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார் என்கிற தகவலை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் இது குறித்து எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ஒரு சிலர் தங்களை டாக்டர் என்று சொல்லிக்கொண்டு இதுபோன்று செய்திகளை வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்துகின்றனர். நான் இது போன்று எந்த பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொள்ளவில்லை. என்னுடைய இந்த உருவத்தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எடை குறைப்பு மற்றும் தொடர் உடற்பயிற்சி ஆகியவற்றால் உண்டானது. அதே சமயம் மற்றவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !