அப்பா ஆகப் போகிறாரா நாகசைதன்யா? நாகார்ஜுனா கொடுத்த பதில்
ADDED : 23 days ago
சமந்தாவுடன் நடந்த திருமணம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்தில் முடிந்ததை அடுத்து நடிகை சோபிதா துலிபாலாவை கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார் நாகசைதன்யா. அவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு முடிந்து விட்ட நிலையில் தற்போது சோபிதா துலிபாலா கர்ப்பமாக இருப்பதாக டோலிவுட்டில் ஒரு தகவல் பரவுகிறது.
நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனா அளித்த ஒரு பேட்டியில், நீங்கள் தாத்தா ஆகப்போவதாக செய்திகள் வெளியாகி வருகிறதே? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, நேரம் வரும்போது நானே சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் சோபிதா துலிபாலா கர்ப்பமாக இருப்பதாக வெளியாகி வரும் செய்தி வதந்தி என்பது தெரியவந்துள்ளது. என்றாலும் இந்த வதந்தியை உண்மை என்று நம்பி நாகசைதன்யாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.