உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரிவு பரபரப்புக்கு நடுவே செல்வராகவன் போட்ட பதிவு

பிரிவு பரபரப்புக்கு நடுவே செல்வராகவன் போட்ட பதிவு

கடந்த 2022ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படத்தை இயக்கிய செல்வராகவன் தற்போது ஏற்கனவே தான் இயக்கிய 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். செல்வராகவனுக்கும், அவரது மனைவி கீதாஞ்சலிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், அதன் காரணமாகவே கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டதாகவும் ஒரு செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து அவர்கள் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்தி பரவி வருகிறது.

இந்த நேரத்தில் செல்வராகவன் எக்ஸ் பக்கத்தில் போட்டுள்ள ஒரு பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், ‛‛திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றி உள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீ எல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள். அப்போது அமைதியா இருங்கள். சில காலம்தான் பெரும் மலை பனியாய் போகும். அனைத்தும் சரியாகிவிடும்'' என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்துவிட்டு செல்வராகவன் குடும்பத்தில் ஏதோ பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. அதைத்தான் அவர் இப்படி வெளிப்படுத்தி உள்ளார் என்று பலரும் கமெண்ட்கள் கொடுத்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Senthil Kumar
2025-12-19 17:43:23

இவன் ஒரு ஆளு முகரைக்கு ரெண்டு கல்யாணம்