உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரீரிலீசில் ஒரு வாரத்தில் ரஜினியின் படையப்பா செய்த வசூல் எவ்வளவு?

ரீரிலீசில் ஒரு வாரத்தில் ரஜினியின் படையப்பா செய்த வசூல் எவ்வளவு?

கடந்த 1999ம் ஆண்டில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, லட்சுமி, சித்தாரா, ராதாரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், வடிவுக்கரசி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் படையப்பா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். 25 ஆண்டுகள் கழித்து ரஜினியின் 75 வது பிறந்தநாளையொட்டி கடந்த டிசம்பர் 12ம் தேதி இந்த படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது. ரஜினி ரசிகர்கள் மீண்டும் அமோகமான வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் கடந்த ஏழு நாட்களில் பாக்ஸ் ஆபீஸில் இந்த படையப்பா படம் 17 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படம் 1999-ம் ஆண்டில் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !