4 இடியட்ஸ் ஆக உருவாகும் 3 இடியட்ஸ் படத்தின் 2ம் பாகம் ?
ADDED : 20 days ago
ஹிந்தியில் 2009ல் 3 இடியட்ஸ் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இந்த படத்தை இயக்கியிருந்தார். அமீர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி ஆகியோர் நடித்திருந்த இந்த படம் பின்னர் தமிழில் விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் என்கிற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, ‛3 இடியட்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக உருவாகும் என ஒரு தகவலை கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த 3 இடியட்ஸ் படம் இரண்டாம் பாகமாக 4 இடியட்ஸ் ஆக உருவாக இருக்கிறது என்கிற தகவல் தற்போது பாலிவுட்டில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடித்த மூன்று ஹீரோக்களும் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்க நான்காவதாக நடிக்க கூடிய நடிகரை தேர்வு செய்யும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.